வைத்தியர்களின் பணி பகிஷ்கரிப்பால் நோயாளர்களுக்கு சிரமம்!!
யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகிள்ளார்கள் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரச வைத்திய சேவையில் உள்ளோர் இன்று நாடு பூராகவும் பகீஸ்கரிப்பில் ஈடுபடுகின்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்திய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறுகிறது.
குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு இயங்கவில்லை அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மாத்திரம் இயங்குகின்றன அத்தோடு வெளிநோயாளர் பிரிவில் நாய்க்கடிக்கு உள்ளாகியோருக்கு சிகிச்சை நடைபெறுகின்றது அதேபோல் கொரோனாதடுப்பு மருந்து வழங்கல் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகின்றது
மேலும் அத்தியாவசியமான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப் படுகின்றது இந்த சிரமங்களுக்கு மனம் வருந்துகிறோம் என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”