வவுனியாவில் “ஹரிதாபிமானி” தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)
நீர் மூலங்களை பாதுகாப்பதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றுவதற்காக தேசிய ரீதியில் ஒரு மில்லியன் மரங்களை நாட்டும் நிகழ்ச்சித்திட்டம் (ஹரிதாபிமானி)வவுனியாவில் இன்று இடம்பெற்றது.
வவுனியா காத்தார்சின்னக்குளம் கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும் சமூகநீர் பாவனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சுபநேரத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டபாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மரம்நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனையடுத்து ஏனைய அதிதிகளால் மரங்கள் நாட்டப்பட்டடதுடன், கிராமமக்களுக்கு மாங்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் எ.சரத்சந்திர, உதவிபிரதேச செயலாளர் ச. பிரியதர்சினி,தேசிய சமூகநீர்வழங்கல் திணைகளத்தின் பொறுப்பதிகாரி ரசான் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவர் கி.டினேஸ்,வனஅதிகாரி முனவீர, கிராமசேவகர் தர்சன் மற்றும், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”