;
Athirady Tamil News

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ வேலைத்திட்டம் தொடர்பாக தௌிவூட்டும் கலந்துரையாடல்!!

0

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய ரீதியில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ´கிராமத்துடன் கலந்துரையாடல்´ வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட குழுக்கள் ஆகியவற்றுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் இன்றைய தினம் (21) மன்னாரில் இடம் பெற்றுள்ளது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று (21) மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் போது மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மடு பிரதேச செயலகங்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற கலந்துரையாடலில் மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், நிதியமைச்சின் உயர் அதிகாரிகள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என அழைக்கப்பட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடலில் 2022 ஆம் ஆண்டிற்கான கிராமங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும், கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பயனாளிகள் தெரிவு தொடர்பாகவும் பயனாளிகளுக்கான திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இளைஞர், விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.