இளம் பெண் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – சிலாபம் புகையிரத பாதையில் புஞ்சி பாலத்திற்கு அருகில் நேற்று (21) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாதம்பே பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய யுவதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் மாதம்பே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை இன்று (22) நடைபெறவுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.