;
Athirady Tamil News

உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ரூ.85 லட்சத்துக்கு ஏலம்…!!!

0

செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த போது அதில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அதிகளவில் அனுப்பப்பட்டன. தற்போது செல்போனில் வாட்ஸ்அப் போன்ற நவீன வசதி இருப்பதால் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படுவது குறைந்து விட்டது.

இந்த நிலையில் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்., பாரீஸ் நகரில் ஏலம் விடப்பட்டது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 3-ந்தேதி வோடபோன் என்ஜினீயர் நீல் பாப்வொர்த் தனது கணினியில் இருந்து இங்கிலாந்தில் உள்ள தனது மேலாளருக்கு ‘மெர்ரி கிறிஸ்துமஸ் (கிறிஸ்துமஸ் வாழ்த்து) என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார். இது தான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ். ஆகும்.

இந்த எஸ்.எம்.எஸ்., பிரிட்டீஸ் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோனால் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏலம் விடப்பட்டது. இந்த உலகின் முதல் எஸ்.எம்.எஸ். 1,07,000 யூரோக்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.85 லட்சம்) ஏலம் போனது.

இதுகுறித்து ஏல மையத்தின் தலைவர் மாக்சிமிலியன் அகுட்டெஸ் கூறும்போது, ஆண்டு இறுதி நிகழ்வுகளின் நடுவில் இருந்ததால் என்ஜினீயர் தனது மேலாளருக்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற எஸ்.எம்.எஸ்.சை அனுப்பினார்.

கண்ணுக்கு தெரியாத பொருட்களை விற்பனை செய்வது பிரான்சில் சட்டப்பூர்வமானதல்ல. எனவே குறுஞ்செய்தியை டிஜிட்டல் சட்டகத்தில் தொகுத்து, குறியீடு மற்றும் தகவல் தொடர்பு நெறிமுறையை கடைப்பிடித்து ஏலம் விடப்பட்டது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.