வடமாகாணத்தில் இருந்து தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை விசாரணை!! (படங்கள்)
2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக வடமாகாணத்தில் இருந்து தகவல் அறியும் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்காக புதிய தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் இளைப்பாறிய நீதியரசர் உபாலி அபேரத்ன மற்றும் ஆணைக்குழு உறுப்பினர்களான இளைப்பாறிய நீதியரசர் ரோகிணி வெல்கம மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி பின்ரே ஜயவர்த்தன ஆகியோர் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.
குறித்த மேன்முறையீட்டு விசாரணைகள் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று (22.12.2021) காலை 10 மணி தொடக்கம் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இவ் அமர்வில் ஆணைக்குழுவினால்
அழைக்கப்பட்டிருந்த பகிரங்க அதிகார சபைகளின் குறித்தளிக்கப்பட்ட அலுவலர்கள் மற்றும் மேன்முறையீட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். மேன்முறையீட்டுக்கு உட்படுத்தப்பட்ட விடயப்பரப்புக்களின் அடிப்படையில் பரிசீலிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு ஆணைகளும் வழங்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”