;
Athirady Tamil News

செல்போன் திருடியதாக திருட்டு பட்டம் கட்டிய சிறுமியின் தந்தைக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு…!!

0

ஜெயச்சந்திரனும், அவரது 8 வயது மகளும் கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தனர். அங்கு பெண் போலீஸ் அதிகாரி ரெஞ்சிதா தலைமையில் போலீசார் ரோந்து வாகனத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது போலீஸ் அதிகாரி ரெஞ்சிதாவின் செல்போன், காணாமல் போனது. அதனை ரோந்து வாகனத்தின் அருகில் நின்ற ஜெயச்சந்திரன் எடுத்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர்.

இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி ரெஞ்சிதா, சிறுமியையும், அவரது தந்தை ஜெயச்சந்திரனையும் திருட்டு பட்டம் கட்டி கண்டித்தார். இதனை கண்டு சிறுமி அழுதார். இதற்கிடையே காணமல் போன செல்போன், ரோந்து வாகனத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியும், அவரது தந்தையும் அங்கிருந்து அனுப்பபட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து பெண் போலீஸ் அதிகாரி ரெஞ்சிதா இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணையும் நடந்து வந்தது.

இதற்கிடையே சிறுமியின் தந்தை ஜெயச்சந்திரன், தனக்கு திருட்டு பட்டம் கட்டி அவமானப்படுத்தியதோடு, தன் மகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ஜெயச்சந்திரனுக்கு ரூ.1½ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். மேலும் வழக்கு செலவுக்கு ரூ.25 ஆயிரம் தனியாக வழங்க வேண்டும் எனவும் கூறினார்.அதோடு குற்றச்சாட்டுக்கு ஆளான பெண் போலீஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் துறைக்கு கோர்ட்டு அறிவுறுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.