வவுனியா புகையிரத நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கை : பயணச்சீட்டின்றி இலவசமாக பயணிக்கும் மக்கள்!! (படங்கள்)
தொடரூந்து திணைக்கள நிர்வாகத்தின் தன்னிச்சையான செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா புகையிரத நிலைய ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடரூந்து பயணச் சீட்டு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதுடன் பொதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகியுள்ளனர். எனினும் முற்பதிவு ஆசணங்களுக்காக பயணச்சீட்டு மாத்திரம் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் பயணச்சீட்டையின்றி புகையிரத்தில் பயணம் மேற்கொண்டு வருவதுடன் பொதிகளையும் கையில் எடுத்து செல்கின்றனர்.
பயணச்சீட்டை கோரிய போதிலும் முற்பதிவு ஆசனங்களை தவீர ஏனைய ஆசனங்களுக்கு பயணச்சீட்டை தர புகையிரத நிலைய அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். அதன் காரணமாக நாம் பயணச்சீட்டையின்றி புகையிரத்தில் பயணிக்கவுள்ளோம். பயணச்சீட்டையின்றி எம்மை பயணிக்குமாறு அவர்களே தெரிவித்தனர் எனவே பயணச்சீட்டையின்றி பயணிப்பது தொடர்பில் தண்டம் விதிக்கும் பட்சத்தில் அவர்களே முழுமையான பொறுப்பு கூறல் என பயணிகள் தெரிவித்தனர்.
அத்துடன் புகையிரத நிலையத்திலுள்ள ஒலிவாங்கிகள் மூலம் புகையிரதம் செல்லும் இடங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் செயற்பாடும் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”