தேர்தலை தள்ளிப்போடுங்கள், பேரணிக்கு தடைவிதியுங்கள்: உ.பி. நீதிமன்றம் வலியுறுத்தல்…!!
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. உ.பி.யுடன் மேலும் நான்கு மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
தேர்தல் நேரம் நெருங்குவதால் பிரதமர் மோடி அடிக்கடி உத்தர பிரதேசம் செல்கிறார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். அதேபோல் எதிர்க்கட்சிகளும் பேரணி நடத்தி வருகின்றன. இதற்கிடையில் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் 3-வது அலை உருவாகும் அச்சம் உள்ளது.
இந்த நிலையில் உத்தர பிரதேச அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிபதி சேகர் யாதவ் , உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை தள்ளி வையுங்கள் என தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் ஒத்தி வைக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கியுள்ளது.
கோப்புப்படம்
அதேபோல் பிரதமர் மோடி தேர்தல் தொடர்பான கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும். பேரணிகள் தடுக்கப்படாவிடில், 2-வது அலையைவிட முடிவு மோசமாக இருக்கும். உயிர் இருந்தால் நமக்கு உலகம் உண்டு’’ என தெரிவித்துள்ளார்.
எந்தவித சமூக இடைவெளி பின்பற்றாமல், நூற்றுக்கணக்கான மக்கள் தினந்தோறும் வெளியில் கூடுவதை கருத்தில் கொண்டு நீதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.