கேரளாவில் 3,680 நத்தை தோடுகளில் உருவான கிறிஸ்துமஸ் ஸ்டார்…!!
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி மத வேறுபாடு இல்லாமல் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் என்றாலே கிறிஸ்துமஸ் மரம், குடில் மற்றும் ஜொலிக்கும் வண்ண விளக்குகள் தான் நினைவு வரும். பாலகன் இயேசு கிறிஸ்துவை வரவேற்கும் வகையில் வீடுகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் தொங்கவிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கேரளாவில் ஆழபுழா அருகே சேர்தலா பகுதியில் ஒரு தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் ஸ்டார் அமைக்கப்பட்டுள்ளது. அதிக மக்களை கவரும் இந்த கிறிஸ்துமஸ் ஸ்டார், விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து வந்த 3,680 ஆப்பிரிக்கா நத்தைகளின் தோடுகளால் ஆனது. இந்த பிரம்மான்ட கிறிஸ்துமஸ் ஸ்டார் மொத்தமாக 25,760 கிலோ எடை கொண்டது.
இந்த ஸ்டாருக்கு தேவையான நத்தைகளின் தோடுகள் மற்றும் அனைத்து வகையான உதவிகளும், மத சார்பின்றி அனைவராலும் பங்களிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.