ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி – குஜராத்திலும் இரவு நேர ஊரடங்கு…!!
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஆனாலும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.
ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.