ஒமைக்ரான் தடுக்க ஸ்பெயினில் முக கவசம் கட்டாயம்..!!
ஒமைக்ரான் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவியும் வருகிறது.
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் வீட்டுக்கு வெளியே வீதிகளுக்கு, தெருக்களுக்கு முக கவசத்துடன் வர வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் அங்கு பொது இடங்களில் முக கவசம் அணிவது விலக்கிக்கொள்ளப்பட்டதும், இப்போது மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு மூடிய அரங்குகளில் முக கவசம் அணிவது மறுபடியும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டில் ஒமைக்ரான் பரவலைக்கட்டுப்படுத்த தேசிய அளவில் பொதுமுடக்கத்தை அமல்படுத்தவோ, முக கவசம் அணிவதை கட்டாயம் ஆக்கவோ முடியாது என பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்துள்ளார்.