மக்கள் பட்டினியால் சாகவேண்டி வரும்: ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி!!
தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் மக்கள் பட்டினியால் சாகவேண்டி வரும்: ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி
தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் மக்கள் பட்டினியால் சாகவேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ளனர். வீட்டு சமையலறைப் பொருட்களில் இருந்து அனைத்து பொருட்களுக்கான விலையும் அதிகரித்துள்ளது. கிராமங்களில் இருந்து பேரூந்தில் பயணம் செய்வதற்கு கூட மக்களுக்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேரூந்து கட்டணங்களும் முன்னரை விட அதிகரித்துள்ளன.
முழு நாட்டுடன் ஒப்பிடுகின்நற போது வன்னி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். பல மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எங்களது மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டும். மக்களது பிரச்சனைகள் மற்றும் வறுமை தொடர்பில் தெரிந்த ஒருவர் நாட்டின் தலைவராக வேண்டும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3 வருடங்கள் ஆகின்ற போதும் இந்த மக்களின் வறுமையை கண் திறந்து பார்க்கவில்லை. இதனால் இந்த அரசாங்கத்தை நாம் மாற்ற வேண்டும். இந்த அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் மக்கள் பட்டினியால் சாகவேண்டி வரும்.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் இணைந்து இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும். 69 இலட்சம் மக்கள் வாக்களித்து தெரிவு செய்தமையால் இன்று அவர்கள் உட்பட அனைத்து மக்களும் கஸ்ரப்படுகிறார்கள். இந்த அரசாங்கத்தின் தலைவர்கள் நாடு நாடாக சென்று கொண்டு இருகிறார்கள். மக்களது பணத்தில் நாம் வெளிநாடுகளுக்கு செல்கின்றோம் என்கின்ற உணர்வு கூட அவர்களுக்கு ஏற்படவில்லை. இதற்கு மக்கள் பதில் அளிக்க வேண்டும். மக்களது பிரச்சனைகளை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு தலைவரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”