சீக்கிய மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம் – பிரதமர் மோடி பெருமிதம்…!!!
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை குஜராத்தில் உள்ள சீக்கிய சங்கத்தினர், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்று வரும் கொண்டாட்டத்தையொட்டி அங்கு திரண்டிருந்த சீக்கியர்கள் மத்தியில் பிரதமர் மோடி காணொலியின் மூலம் இன்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் தின் நகல்களை ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வருவதில் நாங்கள் வெற்றி பெற்றதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மொகாலயர்களின் மதவெறி மற்றும் தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்படி போராடும் என்பதை ஔரவசிங் மன்னருக்கு குரு தேக் பகதூர் பாடம் கற்பித்தார். வாழ்க்கையில் விடாமுயற்சி மற்றும் தியாகத்தின் அடையாளமாக சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் வாழும் உதாரணமாக இருந்துள்ளார்.
நாட்டின் ஒற்றுமைக்கு யாரும் தீங்கு விளைவிக்க முடியாது என்பதை உறுதிபடுத்துவதே முக்கியம். பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவை எளிதில் அணுகி வழிபடி நமது சீக்கிய மக்கள் விரும்பினர். 2019 இல், எங்கள் அரசாங்கம் கர்தார்பூர் வழித்தட பணியை நிறைவு செய்தது.இவ்வாறு பிரதமர் மோடி தமது பேச்சின்போது குறிப்பிட்டார்.