ஜனவரி 10ம் தேதி முதல் முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் – பிரதமர் தகவல்…!!
பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அறிவித்தார். முதற்கட்டமாக மருத்துவம் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றும் கூறினார். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என்றும் கூறினார்.
மேலும், நாசி வழியாக செலுத்தும் தடுப்பூசி மற்றும் உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி
“தனிப்பட்ட வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவது கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கான பெரிய ஆயுதம் என்பதை உலகளாவிய அனுபவம் நமக்கு காட்டுகிறது. தற்போது ஒமைக்ரான் பரவி வருவால் பீதி அடைய வேண்டாம். ஆனால் நாம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். முக கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்” என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.