ஜப்பானில் கடும் பனிமூட்டம் – 100 விமானங்கள் ரத்து…!!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை கடும் மூட்டம் காணப்பட்டது. இதனால் அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு செல்லும் 100 விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இரண்டு பெரிய விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஹிரோகி ஹயகாவா விமான நிலையத்தில் இருந்து செல்லும் 79 விமான சேவைகள் ரத்தானதால் 5,100 பயணிகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய கட்டுப்பாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாலை 4 மணி வரை 49 விமான சேவைகளை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் ரத்துச் செய்து விட்டது. இதனால் 2,460 பயணிகள் அவதியடைந்ததாக அந்த விமான நிறுவன பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
ஒமைக்ரான் அச்சுறுத்தலால் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வாரத்தில் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் தமது எல்லைகளில் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.