தமிழகத்தில் ஜனவரி 3ம்தேதி முதல் 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி…!!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் பரவல் அதிகரிக்காமல் தடுக்கவும், தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் தழுவிய அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்தகட்டமாக வரும் ஜனவரி 3ம் தேதி முதல், 15 வயது முதல் 18 வயதுவரை சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி போடுவதற்கு மொத்தம் 33 லட்சம் பேர் தகுதி பெற்றவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.