ஐக்கிய அரபு நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.15 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்…!
நவிமும்பை நவசேவா துறைமுகத்தில் இருந்து ஜக்கிய அரபு நாட்டிற்கு கன்டெய்னரில் அதிக எடை கொண்ட பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கப்பலில் அனுப்ப்பட இருந்த கன்டெய்னர்களில் சோதனை நடத்தினர்.
அதில் இருந்த ஒரு கன்டெய்னரில் கண்ணாடி பாட்டில்கள் இருப்பதாக எழுதப்பட்டு இருந்தது.
ஆனால் அவற்றின் எடை 15 டன் என இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.
இதையடுத்து அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து இதனை கடத்த முயன்ற ஆசாமிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.