சப்ரிகம வேலைத்திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் வவுனியாவில் திறந்து வைப்பு!! (படங்கள்)
அரசாங்கத்தின் சப்ரிகம வேலைத் திட்டத்தின் கீழ் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சகாயமாதாபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த குடிநீர் திட்டத்தை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் அவர்கள் திறந்து வைத்தார்.
ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் அபிவிருத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட சப்ரிகம வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் நகரசபை உப தவிசாளர் சு.குமாரசாமி, கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”