ஃபிளெக்ஸ் எரிபொருள் வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்…!!!
இந்தியாவில் அடுத்த 6 மாதங்களுக்குள் அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் ஃபிளெக்ஸ் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை தயாரிக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் வாகனங்களில் இருந்து வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுவை படிப்படியாக குறைக்க முடியும் என கூறினார்.
இதுகுறித்து நிதின் கட்கரி பேசியதாவது:-
இந்தியாவின் பெட்ரோலிய இறக்குமதிக்கு பதிலாக, பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வாகனங்கள் மற்றும் ஃப்ளெக்ஸ்-எரிபொருள் வலிமை கொண்ட கலப்பு மின்சார வாகனங்களை தயாரிக்க வாகன உற்பத்தியாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வாகனங்கள் வலுவான கலப்பு மின்சார தொழில்நுட்பத்துடன், 100 சதவீதம் பெட்ரோல் அல்லது 100 சதவீதம் பயோ-எத்தனால் மற்றும் அவற்றின் கலவைகளின் அடிப்படையில் இயங்கும்.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.