இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும் !!
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று(29) அறிவிக்கப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள், போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவிடம் கையளிக்கப்படவுள்ளது.
குறைந்தபட்ச பஸ் பயணக் கட்டணத்தை 2 ரூபாயினாலும், ஏனைய கட்டணங்களை 10 சதவீதம் அளவில் அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பஸ் பயண கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதை விடவும், டீசல் மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
டீசல் மானியம் வழங்காவிட்டால், 14 ரூபாயாக உள்ள ஆகக்குறைந்த பஸ் கட்டணத்தை 20 ரூபாய் வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய கட்டணங்கள், 20 சதவீதமளவில் அதிகரிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.