குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை தடை…!!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்து உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குமரி மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்ல மாவட்டம் நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
அதன்படி வருகிற 31-ந் தேதி முதல் 2-ந் தேதி வரை கன்னியாகுமரி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து வட்டகோட்டை, சொத்தவிளை கடற்கரை, திற்பரப்பு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற 2-ந் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.