யுவதிக்காக பொலிஸாக மாறிய சிப்பாய் சிக்கினார்!!
பொலன்னறுவ – மன்னம்பிட்டிய பகுதியிலுள்ள யுவதி ஒருவரை திருமணம் முடிப்பதாக வாக்குறுதியளித்து ஏமாற்றிய போலி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவ வலய குற்றத்தடுப்பு பிரிவுக்கு பாதிக்கப்பட்ட யுவதியினால் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ளன.
இதன்போது பொலிஸார் சந்தேக நபரை நேற்று முன்தினம் (28) பொலன்னறுவ சீப்புக்குளம் பகுதியில் வைத்து கைது செய்துள்ளதுடன் பிரதான பொலிஸ் பரிசோதகர் பதவிக்குரிய சின்னம் பொருத்தப்பட்டிருந்த சீருடையொன்றையும் அதன்மூலம் பெறப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் போலியான 5000 ரூபா நாணயத் தாள்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 34 வயதுடைய சீப்புக்குளம் பொலன்னறுவ பகுதியை வசிப்பிடமாக கொண்ட இராணுவ சிப்பாய் ஒருவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவ வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்