டுட்டுவின் மறைவுக்கு இலங்கை திருச்சபை வருத்தம் !!
அதிபேராயர் டெஸ்மண்ட டுட்டுவின் மறைவுக்கு இலங்கை திருச்சபை வருத்தம் தெரிவித்துள்ளதோடு, கடவுளின் பிரசன்னத்துக்கு அருகாமைக்குச் செல்ல அவர் புறப்பட்டதால் அவரது முன்மாதிரியான குணம், தைரியம், தலைமைத்துவம் ஆகியன பெரிதும் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கேப்டவுனின் முன்னாள் ஆங்கிலிகன் அதிபேராயர் டெஸ்மண்ட டுட்டுவின் மறைவு செய்தியை நாம் மிகுந்த வருத்தத்துடன் அறிகின்றோம். நிறவெறி எதிர்ப்பு சகாப்தத்தின் ஒரு உயர்ந்த நபராகவும், கிறிஸ்தவ நம்பிக்கையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட, உயர்ந்த நபராக அவர் இருந்தார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராயர் டெஸ்மண்ட் டுட்டு இல்லாமல் தென்னாபிரிக்காவின் சுதந்திரத்துக்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தை கற்பனை செய்வது சாத்தியமில்லை என்று கனிக்கப்படுவதாகவும், நிறவெறி அரசாங்கத்தின் பாசாங்குத்தனத்தை எதிர்த்து அவற்றை அம்பலப்படுத்தியதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலாகவும் அவர் இருந்தார் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.