கடற்கரை, பூங்காக்கள் செல்ல 12 மணி நேரம் தடை – மும்பை போலீஸ் உத்தரவு…!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் கடந்த ஒரு வாரமாக மின்னல் வேகமெடுத்து உள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய பாதிப்பு ஒரே நாளில் சுமார் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 3,900 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், நேற்று 5,368 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
இதேபோல், தலைநகர் மும்பையில் மட்டும் 3,555 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது கடந்த மே 5-ந்தேதிக்கு பிறகு மும்பையில் தினசரி பாதிப்பில் அதிகம் ஆகும். கிட்டத்தட்ட கொரோனா பாதிப்பு நாள்தோறும் 2 மடங்கு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மும்பையில் கடற்கரைகள், திறந்தவெளி மைதானங்கள், பூங்காக்கள் மற்றும் ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.