2 நிமிடம் குதியுங்கள்!! (மருத்துவம்)
குழந்தைகளின் 9 வயதிலேயே பெற்றோர்மதுவின் தீமைகளைப் பற்றி அவர்களுக்கு விளக்க வேண்டும். ஏனெனில், அந்த
வயதிலிருந்துதான் மதுவைப் பற்றிய ஆர்வம் அவர்களுக்கு தொடங்குகிறது. – குழந்தை மருத்துவத்துக்கான அமெரிக்க அகாடமி
முதல் குழந்தைக்குப் பிறகு 2 வருடங்களுக்குள் அல்லது 6 வருடங்களுக்குப் பிறகு பிறக்கிற குழந்தைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் கோளாறோடு இருக்கும் ஆபத்து 2 முதல் 3 மடங்காக அதிகரித்து வருகிறது.
பெற்றோரின் மாறுபட்ட வேலை நேரங்களால், வளரும் குழந்தைகள் உணர்திறன், நினைவாற்றல், பேச்சு, உணர்ச்சி வெளிப்பாடு போன்றவற்றில் குறைபாடு உள்ளவர்களாகவும், 2 வயதுக்குள் உள்ள குழந்தைகள் மன இறுக்கம், மனக்கவலை போன்றவற்றால் ஆவேசமானவர்களாகவும், பருவ வயதில் உள்ளவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு புகை, மது மற்றும் பாலியல் குற்றம் போன்ற தீயப்பழக்கங்களுக்கும் அடிமையாகிறார்கள்.
– எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட்
மனைவி மட்டுமே குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளும் தம்பதிகளைவிட, குழந்தை வளர்ப்பில் சம அளவு பங்கெடுக்கும் தம்பதிகள் தங்கள் உறவிலும் தாம்பத்திய வாழ்விலும் அதிக மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
– அமெரிக்க சோஷியாலஜி அமைப்பு
மூத்த குழந்தைகளின் கல்விக்கு பெற்றோர் அளிக்கும் அதீத அக்கறையே, பிள்ளைகளில் 10 சதவிகிதத்தினருக்கு கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படச் செய்கிறது. இதில் 20 சதவிகிதத்தினருக்கு தீவிர கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
– ஜமா ஆப்தோமாலஜி
நோய் நிவாரண மையங்கள் அதிகம் உள்ள இங்கிலாந்தே, உலகில் இறப்பதற்கு ஏற்ற நாடாக முதல் இடத்தை பிடித்துள்ளது. 80 நாடுகள் உள்ள பட்டியலில் இந்தியா 67வது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் உள்ள மொத்த நோய் நிவாரண மையங்களில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ள கேரள மாநிலம் தீவிர நோய்களை கட்டுப்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
– எகனாமிக்ஸ் இன்டலிஜன்ஸ் யூனிட்
நீரிழிவு நோயுள்ள ஆண்களைவிட, மாரடைப்பு மற்றும் நெஞ்சு வலியால் பாதிக்கப்படுவதற்கான 40 சதவிகித அதிக அபாயம் நீரிழிவு நோயுள்ள பெண்களுக்கு உள்ளது.
– நீரிழிவு ஆய்விற்கான ஐரோப்பிய சங்கம்
ஒரு நாளில் 2 நிமிடம் தொடர்ந்து குதிப்பதன் மூலம் இடுப்பு எலும்புகள் வலுவடைவதால், வயதான பிறகு கீழே விழுந்தால் ஏற்படும் எலும்பு முறிவை குறைக்க முடியும்.
– எலும்பு மற்றும் தாது ஆராய்ச்சி இதழ்
வைட்டமின் ‘டி’ குறைபாடுள்ள முதியவர்களின் செயல்திறனும் சிந்தனைத்திறனும் வேகமாக குறையும்.
– எகனாமிக் பாலிசி இன்ஸ்டிடியூட்
மதம் மற்றும் ஆன்மிக நம்பிக்கை உள்ள புற்றுநோயாளிகள் தங்களின் அன்றாடப் பணிகளைச் செய்வதிலும் ஆரோக்கியத்திலும் சமூக நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அதோடு, பதற்றம் குறைந்து மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதால் புற்றுநோயிலிருந்தும் விரைவில் குணமடைகிறார்கள்.