ஆங்கில புத்தாண்டு 2022 பிறந்தது, உலகமெங்கும் உற்சாக கொண்டாட்டம்…!!
2021 ஆம் ஆண்டு முடிந்து 2022 ஆம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருந்த போதிலும் உலகின் பல்வேறு நாடுகளில் கொண்டாட்டங்கள் களை கட்டின.
நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளித்தது.
#WATCH | New Zealand's Auckland rings in #NewYear2022 with fireworks display
(Video: Reuters) pic.twitter.com/UuorkGHPEg
— ANI (@ANI) December 31, 2021
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 2022 ஆண்டை வரவேற்றது. அங்குள்ள சிட்னி துறைமுகப்பகுதியில் வானத்தை வண்ணயமாக்கும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
#WATCH Australia welcomes the new year 2022 with spectacular fireworks at Sydney Harbour
(Source: Reuters) pic.twitter.com/Y5kPhUqtI6
— ANI (@ANI) December 31, 2021
வட கொரியாவிலும் 2022 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன . டேடாங் நதிக்கரை பகுதியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பிரம்மாண்ட வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அங்கு திரண்டிருந்த மக்கள் செல்போன்கள் மூலம் படம் பிடித்து மகிழ்ந்தனர்.
#WATCH | North Korea welcomes #NewYear2022 with a firework display near the Taedong River
(Source: Reuters) pic.twitter.com/d29i9Qw7Ss
— ANI (@ANI) December 31, 2021
இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாடப்படும். ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்காவிலும் புத்தாண்டு பிறக்கும். நாளை மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக பேக்கர் தீவு மற்றும் ஹாவ்லாந்து தீவு இருக்கும்.
2022-ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.