மருத்துவமனைகளில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்…!!
கொரோனா தொற்று அதிகரிப்பு மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன.
கடந்த மாதம் 2-ந் தேதி கர்நாடக மாநிலத்தில் நுழைந்த ஒமைக்ரான் வைரஸ் ஒரு மாத காலத்திற்குள் 23 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் பரவியுள்ளது. டெல்டா வைரஸ் இடத்தை ஒமைக்ரான் வைரஸ் பிடிக்கத் தொடங்கி உள்ளது என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மீண்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால் தற்காலிக மருத்துவமனைகளை அமைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுகாதார உள்கட்டமைப்பு விரைவில் அழுத்தத்துக்கு உள்ளாகும் ஆபத்து உள்ளது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கிடைப்பதையு விநியோகத்தையும் கண்காணிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.