இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 145 கோடியை தாண்டியது…!!
மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் மூன்றாம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:
ஒட்டுமொத்தமாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 முதல் 44 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கு 50,04,54,035 முதல் டோஸ்கள்
வழங்கப்பட்டுள்ளன. 3 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின்படி அதே வயதினருக்கு 33,50,59,168 இரண்டாவது டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக 84,54,89,349 முதல் டோஸ்களும், 60,85,62,479 இரண்டாவது டோஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி விநியோகம் சனிக்கிழமை 145.40 கோடியை தாண்டியுள்ளது. மாலை 7 மணி வரை 22 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.