முடிவுக்கு வந்த முக்கிய வழக்கு!!
பக்டீரியா உள்ளடங்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட சேதன உரத் தொகையை இலங்கைக்கு எடுத்து வந்ததாக கூறப்படும் சீன நிறுவனத்திற்கும் அதன் உள்நாட்டு முகவருக்கும் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் வங்கியிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வழக்கை இன்று (03) கொழும்பு வர்த்தக நீதிமன்றம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.
அதனடிப்படையில் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீக்குவதற்கு கொழும்பு வர்த்தக நீதிமன்றம் நீதிபதி பிரதீப ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளது.