டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம் !!
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 15 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கான ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால், நேற்று (03) அறிமுகப்படுத்தப்பட்டது.
இளைஞர்களின் திறன்கள், கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட தரவுகளைக் கொண்ட தரவுத்தளமாகப் பயன்படுத்தக்கூடிய ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் பணிப்பாளர் நாயகம் தமித விக்ரமசிங்க தெரிவித்தார்.
டிஜிட்டல் அடையாள அட்டையானது, அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் பணியாளர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரவு வங்கியாக பயன்படுத்தப்படுவதோடு, இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான கருவியாகப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெரிவித்தார். .
சர்வதேச அளவில் அங்கிகரிக்கப்பட்ட ‘பிளக்செயின்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய குறித்த ‘டிஜிட்டல் அடையாள அட்டை’ ஒரு தகவல் தொழில்நுட்பக் கருவியாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று (03) இடம்பெற்றது.