’புதிய சட்டம் வரும்வரை சின்னத் தேர்தலை நடத்த முடியாது’ !!
புதிய சட்டம் கொண்டுவரப்படும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நாங்கள் வேண்டாம் என்று கூறும்போது மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் தவறான சட்டத்தைக் கொண்டு வந்ததாகவும் அதில் பல புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த சட்டமூலம் தவறான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், சட்டத்தை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என வினவியதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, எந்த நேரத்திலும் அமைச்சரவையை மாற்றும் அதிகாரமும் திறமையும் ஜனாதிபதிக்கு இருப்பதாக குறிப்பிட்டார்.