;
Athirady Tamil News

தமிழக மீனவர்கள் 13 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!!

0

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் 18ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் திகதி கைது செய்யப்பட்ட குறித்த 13 மீனவர்களும் , மறுநாள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாவது தவணையாக குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , 13 மீனவர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நீதவான் நீடித்து உத்தரவிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.