வடக்கு விவசாயிகள் நெல் அறுவடையை முற்கூட்டியே திட்டமிடுவது உகந்தது!!
அடுத்தவாரம் மழையை எதிர்பார்க்க முடியும் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடையை முன்கூட்டியே திட்டமிடுவது உகந்தது. என யாழ்.பல்கலைகழக புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் தற்போது பனி பொழிவு அதிகரித்துள்ளது. எனினும் எதிர்வரும் 9ம் திகதி தொடக்கம் 13ம் திகதிவரை வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தற்போதைக்கு வடமாகாணத்தின் உள்நில பகுதிகளில் குறிப்பாக ஏ-9 வீதியை அண்மித்த பகுதிகளில் இரவு வெப்பநிலை 17 செல்சியஸ்வரை குறைவடைய கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”