;
Athirady Tamil News

பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபார இடைநிறுத்தம் நீடிப்பு!!

0

இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

2022 ஜனவரி 05 ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின் பிரகாரம் செயற்பட்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.