குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் கைது!!
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்கள் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இரு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மீட்டிருக்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் சுன்னாகம் – அம்பலவாணர் வீதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலானாய்வு பிரினர் நடத்திய சோதனை நடவடிக்கையில் குற்றச் செயலர்களுடன் தொடர்புடைய இரு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியிருக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”