சீன வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு!!
சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார்.
சீன வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும் (09) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நினைவு தினம் நினைவுகூரப்படவுள்ளது.
இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தின் போது முதலீட்டு யோசனைகள் பலவற்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.