;
Athirady Tamil News

யாழ் மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது.!! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு மாதகல் வீதியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகம் மேற்கூரையின்றி காணப்படுகின்றது.

குறித்த வீதியில் உள்ள காணி ஒன்றினுள் சிறிய தற்காலிக கொட்டில் ஒன்றில் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் , அலுவலகத்தின் மேற் கூரையின்றிய நிலையில் காணப்படுகின்றது.

அலுவலகத்தினுள் கதிரை மேசைகள் உள்ளிட்ட அலுவலக பொருட்கள் சிலவும் காணப்பட்டன.

அலுவலகத்தின் கதவும் பழுதடைந்த நிலையில் திறந்தவாறே காணப்படுவதுடன் , பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் உருவ படம் ஒன்றும் நிலத்தில் வைக்கப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்தது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.