ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி துணை தலைவராக உர்ஜித் படேல் நியமனம்…!!!
ஆசியா கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகள் இணைந்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்ற புதிய வங்கியை ஏற்படுத்தின.
இந்நிலையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணை தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான உர்ஜித் படேல் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்த பதவியில் 3 ஆண்டுகள் பணிபுரிவார்.
ஆசிய நாடுகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு தேவையான நிதியை பல்வேறு உறுப்பு நாடுகளுக்கு இந்த வங்கி அளிக்கும். இதனால் தேக்கமடைந்துள்ள பணிகள் விரைவில் நடைபெறும்.
உர்ஜித் படேல் 2018 டிசம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.