சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்ட டெல்டாக்ரான் பாதிப்பு..!!!
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா உள்ளிட்ட புதிய வகை பாதிப்புகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின.
ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, இந்த இரண்டு வைரஸ்களும் கலந்த புதிதாக மேலும் பல உருமாற்ற வைரஸ்கள் உருவாகக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், சைப்ரஸ் நாட்டில் டெல்டாக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு சில பகுதிகளில் தென்படத் தொடங்கி உள்ளது.
இந்த வைரஸ் டெல்டா வகையின் மரபணு பின்னணியை ஒத்தும், ஒமைக்ரானின் சில திரிபுகளையும் கொண்டுள்ளது. இதுவரை மொத்தம் 25 பேர் பாதிப்பு அடைந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின.