;
Athirady Tamil News

டெல்லியில் தங்க இழைகள் பதிக்கப்பட்ட மிட்டாய் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை…!!

0

நம்ம ஊரில் இனிப்பு வகைகள் ஆயிரத்தை தாண்டினாலே அதிகம். ஆனால் டெல்லியில் உள்ள கடையில் ஒரு கிலோ மிட்டாய் ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை ஆவது பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. வட இந்திய மக்கள் தினமும் உணவுகளில் இனிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இனிப்பு பலகாரங்களுக்கு இங்கு தனி மவுசு உண்டு.

ஜிலேபி, இமார்த்தி, காஜுகட்லி, கலக்கண்ட், கீர், மிட்டாய் என ஏராளமான இனிப்பு வகைகள் இங்கு பிரபலம். இதில் தங்க இழைகளில் பதிக்கப்பட்ட மிட்டாய் என்ற இனிப்பு வகை கிலோ ரூ.16 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.

டெல்லி மஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு கடையில்தான் இந்த மிட்டாய் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதிக விலை என்றாலும் ஏராளமான பொதுமக்கள் இந்த இனிப்புகளை ஆர்வத்துடன் வாங்கி செல்வதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாக பரவி பல விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.