குல்மார்க் பகுதியில் பனிப்புயலில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் உயிருடன் மீட்பு…!!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க்கில் மலைப் பகுதிகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். நேற்று அந்த பகுதியில் வீசிய பனிப்புயலில் குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர்.
இது குறித்து அறிந்த பனிமலைகளில் பயணம் செய்யும் இருசக்கர வாகன அமைப்பை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக கோண்டோலா தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் சனிக்கிழமை முதல் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருகிறது. குல்மார்க்கில் கடந்த இரண்டு நாட்களாக சாலைகளை மூடியிருந்த பனியை அகற்றும் பணி நடைபெற்றது. ஓரிரு நாட்களுக்கு இதே நிலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ் ஆகவும், குல்மார்க்கில் மைனஸ் 4.6 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. மோசமான வானிலையால் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும், சில பகுதிகளில் பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவுக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது