சகுராய் விமான சேவையின் நிர்வாக இயக்குனர், தலைமை பொறியியலாளர் கைது!!
சகுராய் விமான சேவையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பொறியியலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இவர்கள் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தினம் இலகுரக விமானம் ஒன்று திடீரென கட்டுநாயக்க கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் தரையிறக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு விமானிகள் மற்றும் வௌிநாட்டு பயணிகள் இருவர் காயமடைந்திருந்தனர்.
இந்த விபத்தை தொடர்ந்து சகுராய் விமான சேவையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.