நேபாளத்தில் ஜனவரி 29 வரை பள்ளிகள் மூடல்…!!
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புக்கு இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் தப்பவில்லை.
கடந்த ஞாயிறன்று 1100க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, அங்குள்ள அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், ஸ்டேடியங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு, உள்ளூர் விமானங்களில் ஏறுவதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. வரும் 17-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு பேரிடர் மேலாண் மையம் தெரிவித்தது.
இந்நிலையில், கொரோனாவின் தீவிர பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, நேபாளத்தில் ஜனவரி 29-ம் தேதி வரை பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.