;
Athirady Tamil News

குரங்கின் இறுதி ஊர்வலத்தில் 1,500 பேர் பங்கேற்பு- ம.பியில் வினோதம்…!!

0

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்திற்கு அடிக்கடி வந்த குரங்கு ஒன்று இறந்துபோனது. இதையடுத்து அந்த குரங்கை கடவுள் அனுமாராக பாவித்து கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர்.

மேலும், மந்திரம் கூறி குரங்கின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்தனர். ஹரி சிங் என்பவர் குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்வதற்காக தலையை மொட்டையடித்துக் கொண்டார்.

மேலும் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து குரங்கின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பெரிய உணவு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். உணவு விருந்தில் 1,500 பேர் பங்கேற்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொது இடத்தில் கூடியதற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.