தனிநடிப்புப் போட்டியில் யா/ நடேஸ்வராக் கல்லூரி முதலிடம்!! (படங்கள்)
வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயல் திறன் அரங்க இயக்கம், கலாநிதி விஜயரத்தினம் கென்னடி ஞாபகார்த்தமாக நடத்திய தனிநடிப்பு போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் காரைநகர் இந்துக்கல்லூரியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
‘பேரிடரை வெல்வோம்’ என்ற தலைப்பில் வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற இந்த நாடகப்போட்டியில் யா/ நடேஸ்வராக் கல்லூரியின் மாணவி செல்வி வானுப்பிரியா சிவசுப்பிரமணியம் முதலாவதிடத்தைப் பெற்று ரூபா 25000 பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.
இரண்டாவது இடத்தினை பருத்தித்துறை யா/வடஇந்து கனிஸ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் றிச்சட் சீன் சாமுவேல் பெற்றுக்கொண்டு பதினையாயிரம் ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.
மூன்றாம் இடத்தை யாழ்.திருக்குடும்ப கன்னியர்டம் தேசியப்பாடசாலையைச் சேர்ந்த செல்வி டனோஜா எட்வின் பெற்றுக்கொண்டதோடு பத்தாயிரம் ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டார்.
மேலும் சிறந்த ஆற்றுகைகளாக முல்லைத்தீவு றோ.க.த.பெ பாடசாலை மாணவன் செல்வன் தக்சயன் உதயகுமார் மற்றும் பருத்தித்துறை செ.தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த செல்வி திவ்யா பாலசுப்பிரமணியம் ஆகியோரின்; தனிநடிப்பு ஆற்றுகை தேர்வாகியிருந்தன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”