அகிலேஷ் யாதவ் முன் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் சுவாமி பிரசாத் மவுரியா..!!
உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சிகளும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.கவிற்கும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இதற்கிடையே, பா.ஜ.க.வுக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.வும், மந்திரியுமான சுவாமி பிரசாத் மவுரியா மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து மேலும் 6 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சுவாமி பிரசாத் மவுரியா இன்று அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பா.ஜ.க.வில் இருந்து விலகிய தரம் சிங் சைனி, பகவதி சாகர், வினய் ஷக்யா உள்ளிட்டோரும் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.