கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறது – சுவிட்சர்லாந்து அரசு தகவல்…!!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்ததால் கொரோனா நோய்தொற்று அதிகரித்தபடியே இருக்கிறது.
தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து கொரோனா நோய் தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் முழுமையான பலனை அளிக்கவில்லை. இதனால் கொரோனா பெரும் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதற்கிடையே உருமாறிய ஒமைக்ரான் வைரசால் கொரோனா பெருந்தொற்று விரைவில் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தியால் கொரோனா தொற்று முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ்
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:-
ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம். மக்களிடம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருக்கிறது.
ஒமைக்ரான் வைரஸ் இந்த கொரோனா தொற்று நோயின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. குறைவான ஆபத்துக்கொண்டது.
ஆனால் அந்த வைரஸ் எங்களது தடுப்பை உடைப்ப தற்கு எந்த காரணமும் இல்லை. அது எச்சரிக்கையாக மாறுவதற்கான பகுதியையும் கொண்டிருக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாளில் இருந்து 5 நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.