18 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை!!
எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டு இருக்காது என மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 3000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதால் மின்வெட்டுக்கு அவசியமில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு 3,000 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைத்துள்ளது. எனவே 18ஆம் திகதி வரை மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும்.
எனினும் நாளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். வருடத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின் அளவு குறித்து அறிவிப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் என்றார்.