‘ பயன்படுத்திய ஆணுறைகளை போல வீசமுடியாது’ !!
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு நாங்கள் பெரும் பாடுபட்டவர்கள் எனத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விமர்சிப்பதற்கும் தட்டிக்கேட்பதற்கும் எமக்கு உரிமையுள்ளது. எம்மை உபயோகப்படுத்திய “கொண்டம்“ ஆக (ஆணுறை) ஆக வீசுவதற்கு அரசாங்கத்துக்கு முடியாது. வெளியே அனுப்புவதானால் அனுப்புமாறு கூறுகிறோம். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்றார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,
அமைச்சுப் பதவியை விட்டு செல்ல யோசிக்கிறீர்களா? எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ஐயோ இல்லை. அமைச்சுப் பதவியை விட்டு செல்ல எம்மால் முடியும். செல்வதாயின் அரசாங்கத்திலிருந்து சென்று எதிர்க்கட்சியாக வேலையை ஆரம்பிக்க வேண்டும். அது கட்சியின் செயற்குழு தீர்மானிக்கும் விடயம். தானோ அல்லது முன்னாள் ஜனாதிபதியோ அதனை தீர்மானிக்க முடியாது என்றார்.
தமது கட்சி தற்போது கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை முன்னெடுத்துச் செல்வதாகவும் நாட்டின் நிலைமையை தமது ஆதரவாளர்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்.இல்லையெனில் அரசாங்கம் செய்யும் அனைத்தும் நாம் ஆதரவு வழங்கவுதாக ஆதரவாளர்கள் எண்ணிவிடுவார்கள் என்றார்.
நாட்டின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் நாம் எமது அபிப்ராயங்களை தெரிவித்து அது ஊடகங்களில் வெளிவந்ததும் அரசாங்கத்தில் இருக்கும் சிலர், சில முட்டாள்தனமான தீர்மானங்களை எடுக்கின்றனர். அரசியல் தெரியாத பபாக்கள் எம்மைத் தாக்குகின்றனர். பிரச்சினைகள் இருக்குமாயின் தனியாக தீர்த்துக்கொள்ளலாம் என்றார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அரசாங்கத்தை விட்டுச் செல்வதாயின் பேசிக்கொண்டிருக்காமல் செல்லுமாறு கூறியுள்ளமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, இளைஞர் ஒருவர் பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தி அவரை துஷ்பிரயோகப்படுத்திய பின்னர் சிலர் “அன்டன்ன நெதுவ யன்ன ஓய் யன்ன” என அந்தப் பெண்ணைப் பார்த்து கூறுவார்கள் அது போல தான் நாமலின் பேச்சும் உள்ளது என்றார்.